`கரூரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது' - பிரதமர் மோடி இரங்கல்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.