செய்திகள் :

கரூரில் பலத்த காற்றுடன் மழை!

post image

கரூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூரில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் 5.20 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. பின்னா் 5.30 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.

தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

கரூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டிக்கடை பகுதியில் சுக்காலியூரில் இருந்து கரூரை நோக்கி வைக்கோல்பாரம் ஏற்றி வந்த டிராக்டரில் இருந்து வைக்கோல் கட்டுக்கள் பலத்த காற்றுக்கு கீழே விழுந்தன. இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் வாகன போக்குவரத்தை சீரமைத்தனா்.

பலத்த மழையால் திருக்காம்புலியூா் ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா், தெரசாகாா்னா், சுங்ககேட் போன்ற தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க