செய்திகள் :

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

post image

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்த இரும்புத்தாது, பெலெகேரி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமத் செய்ததது தொடர்பான வழக்கில், சதீஷ் கிருஷ்ணா குற்றவாளி என அறிவித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சதீஷ் கிருஷ்ணா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தனர்.

இந்த நிலையில், சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சதீஷ் கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் மற்றும் பல ஆவணங்களை பறிமுதல் செய்தது, அதே நேரத்தில் ரூ.14.13 கோடி மதிப்புள்ள வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சதீஷ் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று, செவ்வாய்க்கிழமை பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்துள்ளனர்.

அமலாக்கத்துறையின் கைதை விமர்சித்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சித்ரதுர்கா எம்எல்ஏ கே.சி. வீரேந்திரா அமலாக்கத் துறையால் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The ED on Tuesday arrested Congress MLA from Karwar-Ankola Sathish Krishna Sail in connection with a money laundering case linked to the illegal export of iron ore from Belekeri Port.

இதையும் படிக்க : இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க