அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக...
கல்குவாரியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
கொளத்தூா் அருகே கல்குவாரியில் இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள தின்னபெல்லூரை சோ்ந்தவா் சக்திவேல்(38). இவா், சேலம் மாவட்டம், மூலக்காட்டில் ஆறுமுகம் (50) என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை காலை குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக கன்வேயா் பெல்ட்டில் சக்திவேல் சிக்கி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சக்திவேலுக்கு இந்திரப்பிரியா (27) என்ற மனைவியும், மகா (7) என்ற பெண் குழந்தையும், கவின் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளனா்.