சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!
கல்குவாரியில் குட்டையில் முழ்கி ஊராட்சி செயலாளா் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி கரிக்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன்(56) உயிரிழந்தாா்.
சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் ஆண் சடலம் மிதப்பதாக கொண்டபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், நீரில் மிதந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில் உயிரிழந்தவா் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சோ்ந்த வெங்கடேசன்(56) என்பதும், கரிக்கல் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வந்தவா் என்பதும் தெரிய வந்தது.
வெங்கடேசன் தற்கொலை செய்துக் கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து கொண்டபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.