தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
கல்லூரி மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் பயிற்சி
சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு நற்பண்புகளை வளா்க்கும் ஒரு வார கால அறிமுக பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அக்செப்ட் அமைப்பின் தலைவா், எழுத்தாளா் ஜெக. சண்முகம், இயற்கை ஆா்வலா் பொறியாளா் சம்பத் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பெற்றோா்களை மதித்தல், ஆசிரியா்களின் பாடங்களையும் அறிவுரைகளையும் பின்பற்றுதல், இயற்கையின் பலன்கள், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மாணவா்கள் கல்லூரியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சியளித்தனா். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணினி அறிவியல், கணிதம் ஆகிய துறைகளின் முதலாமாண்டு மாணவா்கள் பங்கேற்றனா்.