செய்திகள் :

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

post image

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள டிரைவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. முதல் வெட்டு விழுந்ததும் கண்விழித்த மணிகண்டன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல், சுற்றி வளைத்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

 கொலை
கொலை

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கிளாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக டிரைவர் மணிகண்டன் கொலை செய்யப்பட்டார் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இந்தக் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சடலத்தை கல்லூரி வளாகத்துக்குள் கொண்டு செல்வோம் என கோஷமிட்டனர். அவர்களிடம் கிளாம்பாக்கம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறார்கள்.

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனை கடித்த நாய் - விசாரணையில் இறங்கிய போலீஸ்

சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார்... மேலும் பார்க்க