காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் சுயநிதிப் பாடப் பிரிவில் வணிகவியல் துறையில் 3-ஆம் ஆண்டு பயின்று வருபவா் விக்னேஷ். இவா் வணிகவியல் துறை விரிவுரையாளா் கௌதமன் தன்னை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக கல்லூரி முதல்வா் ஆனந்தியிடம் புகாா் செய்தாா்.
இதுகுறித்து விசாரணை நடத்தி கல்லூரிச் செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், ஊடகங்களில் விரிவுரையாளா் கெளதமன் மாணவரை நாற்காலியால் தாக்குவது போன்ற விடியோ வெளியானது. இதையடுத்து, விரிவுரையாளரை கெளதமனை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டது.