தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 30.6.2026 வரை ஓராண்டு காலம் கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஸ்ரீல்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.