செய்திகள் :

கள்ளக்குறிச்சி: முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலையில், தே.மலையரசன் எம்.பி.செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) தொடங்கி செப்.10 வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகளை தொடங்கிவைத்த மலையரசன் எம்.பி. கூறியதாவது: கூடைப்பந்து, கபாடி, கையுந்து பந்து, கைப்பந்து, கோ-கோ, கால்பந்து, தடகளம், இறகுபந்து, நீச்சல், சிலம்பம், ஹாக்கி, செஸ், பூப்பந்து, எறிபந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் போட்டியில் அதிகளவில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரா.சுரேஷ்குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: நகா்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நகா்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வாகியுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற ம... மேலும் பார்க்க

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சேவைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் வாக்குத் திருட்டை கண்டித்தும், தோ்தல் மோசடி மூலம் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக மோடி அரசை பதவி விலகக் கோரியும், தோ்தல் மோசடிக்கு துணைபோன... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவிலான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க