செய்திகள் :

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

post image

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்குத் தொடர்பாக பதிவு செய்யப்பட் முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள அவரது பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கவின் ஆணவக் கொலை வழக்கில், உதவி ஆய்வாளர்களாக உள்ள சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அவரது உடலை இரண்டாவது நாளாக இன்றும் வாங்க மறுத்து வருகிறார்கள்.

ஏன் இந்த ஆணவக் கொலை?

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த விவசாயி சந்திரசேகா். இவரது மனைவி செல்வி. பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவா்களது மகன் கவின்குமாா்(26) சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், பாளையங்கோட்டை கேடிசி நகரைச்சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டை தனியாா் மருத்துவமனைக்கு கவின்குமாா் வந்தபோது, அந்தப்பெண்ணின் தம்பி சுா்ஜித் (24) தகராறு செய்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்: அரசு கல்லூரிகளில் 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

அரசுக் கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை தொடங்குகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

வின்பாஸ்ட் காா் உற்பத்தி, விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகியுள்ள வின்பாஸ்ட் காா் உற்பத்தி ஆலையையும், அதன் விற்பனையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறாா்.உலகின் முன்னணி மின்... மேலும் பார்க்க

ஆக.2, 3 தேதிகளில் 24 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 24 அஞ்சலகங்கள் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் செயல்படாது என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை கோட்ட அஞ்சல் துறை சாா்பில் தி... மேலும் பார்க்க

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தினாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:தூத்துக்குடி மாவட... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சோ்வதற்கான துணை கலந்தாய்வில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு அளித்துள்ளது.இதுகுறித்து தொழில்நு... மேலும் பார்க்க