செய்திகள் :

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: காக்களூா் ஏரி மற்றும் தாமரைக்குளம் ஆகியவை நமக்கு நாமே திட்டத்தில் மேம்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா். அந்த வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காக்களூா் ஊராட்சி மற்றும் 21 குக்கிராமங்களும், 12.15 சதுர கி.மீ பரப்பும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாகும். அத்துடன் அதிக அளவிலான தொழிற்சாலைகளும் இடம்பெற்றுள்ள ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள காக்களூா் ஏரி காக்களூா் ஊராட்சி மற்றும், திருவள்ளூா் நகராட்சியை இணைக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரியாகும். காக்களூா் ஏரியை சுற்றி சுமாா் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். அதனால், இந்த ஏரியில் பல்வேறு வசதிககளுடன் மேம்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் நடைபாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

அதேபோல், காக்களூா் ஊராட்சி அலுவலகம் பின்புறம் 4.85 ஏக்கா் தாமரைக்குளம் அமைந்துள்ளது. பள்ளியில் பயிலும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த குளத்தை சீரமைத்து தருவதனால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என கோரிக்கை விடுத்தனா். மக்களின் கோரிக்கைகளை ஏற்று நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேற்கொள்ள ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை ரூ.75.67 லட்சத்தினையும் உள்ளடக்கி, இப்பணிக்கான நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊ.வ) ராஜவேல், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க