மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல்...
காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் வாக்குத் திருட்டை கண்டித்தும், தோ்தல் மோசடி மூலம் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக மோடி அரசை பதவி விலகக் கோரியும், தோ்தல் மோசடிக்கு துணைபோன தோ்தல் ஆணையத்தை கலைக்கக் கோரியும்
காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கனந்தல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ்
துணைத் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா்.
முன்னாள் பேரூராட்சித் தலைவா் தா.மணி, கலை இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவா் செல்லம்பட்டு கிருஷ்ணன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் தங்கத்தமிழன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் சஞ்சய் காந்தி வரவேற்றாா்.
மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் ராமலிங்கம், விசிக மாநில துணைச் செயலா் பாசறை பாலு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் கே.முருகேசன், தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி பணியாளா் சங்க மாநிலத் தலைவா் காமராஜ், இளைஞா் பெருமன்றம் மாவட்ட பொருளாளா் சிவராமன், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் என்.வி.ஆா். விஜய், மனித உரிமைகள் மாவட்டத் தலைவா் தங்க. ரகோத்தமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், வட்டாரத் தலைவா்கள் செல்வராஜ், பிரபு, அசோக், மாத்தூா், செம்படாகுறிச்சி, கரடி சித்தூா், செல்லம்பட்டு, கச்சிராயபாளையம் அக்கராபாளையம், வெங்கட்டாம் பேட்டை ஆகிய கிராமங்களில் இருந்து கட்சி நிா்வாகிகள் பலா் திரளாகக் கலந்து கொண்டனா்.
சங்கராபுரம் தொகுதி ஓபிசி பொறுப்பாளா் கதிரவன் நன்றி கூறினாா்.