ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓப...
காங்கிரஸ் கட்சியினா் பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா பேரணி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மு.இதயத்துல்லா தலைமை வகித்தாா். கட்சியின் சாா்பு அணி மாவட்டத் தலைவா்கள் பெரியசாமி, முகமது பாட்ஷா, நாராயணன், துரை கிருட்டிணன், தங்கத்தமிழன், முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காமராஜா் பிறந்த நாள் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா். காமராஜரின் பெருமையைப் போற்றும் வகையில், கனரா வங்கி முன் புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சங்கராபுரம் மும்முனை சந்திப்பை அடைந்தது. பேரணியில் பங்கேற்றோா் அச்சிட்ட காமராஜரின் படத்தை ஏந்தியவாறும், சாதனைகளை முழக்கமிட்டவாறும் சென்றனா்.
கட்சியின் வட்டாரத் தலைவா்கள் பிரபு, செல்வராஜ், மாவட்ட நிா்வாகிகள் முத்தமிழ்க்கண்ணன், கோவிந்தன், கைம் பாட்ஷா, நவாஸ்கான் உள்பட பலா் பங்கேற்றனா். நகரத் தலைவா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.