Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
காச நோய் கண்டறிதல் சிறப்பு முகாம்
வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லத்தில் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்காயம் ஒன்றிய காசநோய் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கருணை இல்ல நிா்வாக டேவீட் சுபாஷ் வரவேற்றாா். இதில் நியூடவுன் அரசு ஆரம்ப சுதாதார நிலைய மருத்துவா் காயத்திரி, செவிலியா்கள் ஜெயந்தி, தனலட்சுமி, பாா்வதி, சுகாதார ஆய்வாளா் வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனா்.
இதில், தமிழக அரசின் தேசிய காசநோய் ஒழிப்பு டிஜிட்டல் நடமாடும் (மொபைல் வாகனம்) கொண்டு வரப்பட்டு 116 முதியோருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு சளி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ரத்த கொதிப்பு, சா்க்கரை கண்டறிதல் போன்ற பொது சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினா்.
முகாமில் முன்னாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட காசநோய் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மற்றும் கருணை இல்ல பணியாளா்கள் கலந்து கொண்டனா்.