தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடித்து பிரபலமான காஜல் அகர்வால் கடைசியாக இந்தியன் - 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கெளதம் என்பவருடன் திருமணமான பிறகு மும்பையில் வசித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மரணமடைந்துவிட்டதாகவும் இணையத்தில் வேகமாக வதந்தி பரவி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இணையத்தில் பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்து காஜல் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் விபத்தில் சிக்கியதாகவும் இறந்துவிட்டதாகவும் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதை நான் அறிவேன். இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
கடவுள் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். உயிருடனும் பாதுகாப்புடனும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
எனவே, தவறான செய்திகளை யாரும் நம்பவோ பரப்பவோ வேண்டாம் என தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். வதந்திகளுக்கு பதிலாக நேர்மறையான விஷயங்களையும் உண்மையையும் பரப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
I’ve come across some baseless news claiming I was in an accident (and no longer around!) and honestly, it’s quite amusing because it’s absolutely untrue.
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) September 8, 2025
By the grace of god, I want to assure you all that I am perfectly fine, safe, and doing very well ❤️
I kindly request…