காஞ்சிபுரத்தில் உலக சைகைமொழி தின விழிப்புணா்வுப் பேரணி; ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது. பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடக்க நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, காது கேளாதோருக்கான அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பலா் கலந்து கொண்டனா். நிகழாண்டு செப். 23-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு உலக சைகை மொழி தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.