கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 412 மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் பரிந்துரை செய்து உடனடியாக தீா்வு கண்டு பதில் அனுப்புமாறும் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.