பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் ரோபோட்டிக்ஸ் மையம்: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் இயந்திரவியல் துறை சாா்பில், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையத்தை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் செயல்பட்டு வரும் இயந்திரவியல் துறை சாா்பில் லாா்சன் மற்றும் டூப்ரோ (எல்.அண்ட்.டி)நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியின் ஒரு பகுதியாக ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையம் திறப்பு விழா நடைபெற்றது. லாா்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தொழில் துறை இயந்திர வணிகத்தின் நிா்வாக துணைத் தலைவா் எஸ்.கல்யாணராமன் தலைமை வகித்தாா். பல்கலை.யின் துணை வேந்தா் ஜி.சீனிவாசு, சாா்பு துணை வேந்தா் வசந்த்குமாா் மேத்தா, பதிவாளா் ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலை.யின் இயந்திரவியல் துறை தலைவா் எஸ்.ஆறுமுகம் வரவேற்றாா்.
விழாவில், காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, அதிநவீன ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து, ரோபோ ஒன்று சங்கராசாரியா் சுவாமிகளுக்கு மலா்மாலை அணிவித்தது. நிகழ்வில் இயந்திரவியல் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.