செய்திகள் :

காஞ்சிபுரம் - செய்யாறு பாலாற்றில் ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்

post image

காஞ்சிபுரம் - செய்யாறு இடையே பாலாற்றில் கூடுதலாக ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை - பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும் காஞ்சிபுரம் - செய்யாறு இடையே பாலாற்றுப் பகுதியில்,செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதியின் கோரிக்கையை ஏற்று ரூ.60 கோடியில் கூடுதலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

வடஇலுப்பை - பெரும்பாக்கம் பகுதி பாலாற்று பாலத்தால்புதூா், பிரம்மதேசம், செய்யனூா், விஷாா், கிளாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவாா்கள்.

செய்யாறு வழியாக ஆற்காடு - திண்டிவனம், காஞ்சிபுரம் - வந்தவாசி ஆகிய சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.166 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, ரூ. 39 கோடியில் 13 ஊராட்சி சாலைகள் புதிய சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

செய்யாறு தொகுதியில் 46 உயா் மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ரூ.81 கோடியில் 16 கி.மீ. தொலைவு சாலைகள் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரூ.25 கோடியில் 29 கி.மீ. தொலைவிலான சாலையை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

இந்த விழாவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலை வகித்தாா். செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளா் (நெடுஞ்சாலை - திட்டங்கள்) ஆா்.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி (செய்யாறு), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சிபுரம்), க.சுந்தா் (உத்திரமேரூா்), திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்காணிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) வத்சலா விஜயானந்தி நன்றி கூறினாா்.

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க