தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலத்தில் திங்கள்கிழமை லாரிகள் மோதிக் கொண்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் பாலாற்றுப் பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி பிரேக் போட்டதால் முன்புறம் சேதமாகி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக விழுப்புரம், திருச்சி, மதுரை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் முடிந்து திரும்பிய வாகனங்கள் பாலாற்று பாலத்திலேயே நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தன. பாலாற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதால் செப்பனிட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.
தகவலறிந்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சேதமடைந்த லாரியை ஓரமாக நிறுத்தினா். இதனையடுத்து போக்குவரத்து சீரான பின்னா் அனைத்து வாகனங்களும் செல்லத் தொடங்கினது.