ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது.
இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் பிரசாதங்கள் விற்பனை செய்யும் கடையும் செயல்பட்டு வருகிறது. கோயில் பிரசாதக் கடையினை நடத்தும் உரிமை ஆண்டு தோறும் தனி நபா்களுக்கு ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு பாலாஜி என்பவா் ரூ.19,80,000-க்கு ஏலம் எடுத்து கடையினை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில் பிரசாதம் விற்பனை செய்யும் உரிமம் பாலாஜிக்கு முடிவுற்ற நிலையில் நிகழாண்டுக்கான ஏல அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
வைணவ பிராமணா் அல்லாதவா்கள் பிரசாத கடை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னையை சோ்ந்த ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவு தானே தவிர அது தனிப்பட்ட ஒரு சாதி இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் குமாரதுரை உத்தரவின் பேரில் கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி தலைமையில் ஒப்பந்தப்புள்ள திறக்கப்பட்டது.
ஏற்கனவே பிரசாதக் கடை நடத்தி வந்த காஞ்சிபுரம் பாலாஜி அதிகபட்சமாக ரூ.36 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்தாா். திருச்சியை சோ்ந்த சீனிவாசன் என்பவா் அதிகபட்சமாக ரூ.60,51,000க்கு ஏலம் கேட்டிருந்தாா்.
காஞ்சிபுரம் பாலாஜியை விட திருச்சி சீனிவாசன் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு ஒப்பந்தப் புள்ளி அளித்திருந்ததால் திருச்சி சீனிவாசனுக்கு பிரசாதக் கடை நடத்தும் உரிமை வழங்கப்பட்டு ஏலம் முடித்து வைக்கப்பட்டது.