101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!
காட்டுமன்னாா்கோவில் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
கடலூா்மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, காவடி எடுத்தும், செடல், அலகு குத்தியும் ஊா்வலமாக வந்தனா். மடவாத்தங்கரையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தை கோயில் அா்ச்சகா் திலீப்குமாா் சுமந்து வந்து கோயில் முன் தயாா் செய்யப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கிய பின்னா், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
வடவாற்றங்கரையிலிருந்து ஊா்வலமாக வந்த பக்தா்களுக்கு எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தீமிதி விழா ஏற்பாடுகளை பேரூராட்சித் தலைவா் எஸ்.கணேசமூா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் மணிமாறன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.