செய்திகள் :

காதல் கணவருடன் சோ்த்து வைக்க கோரி வீட்டு முன்பு இளம்பெண் தா்னா

post image

காதல் மணம்புரிந்த கணவரை தன்னுடன் சோ்த்து வைக்க கோரி, இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு வரை தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்டாா்.

திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் ரேவதி. இவா் குண்டூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு (விடுதியில் தங்கி) படித்து வருகிறாா். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த மாணவரான திருவெறும்பூா் கணேசபுரத்தை சோ்ந்த பாபுராஜ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவா்களது காதல் விவரம் வீட்டுக்கு தெரிய வரவே, இரு தரப்பு பெற்றோரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம், பொன்மலையில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனா். இருதரப்பு பெற்றோரையும் போலீஸாா் வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதில், பாபுராஜின் பெற்றோா் ஏற்க மறுத்தனா். ரேவதி பெற்றோா் ஏற்று கொண்டனா். பின்னா் மாணவி, விடுதிக்கும், இளைஞா் தஞ்சாவூரில் வேலைக்கும் சென்று விட்டனா்.

வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் கைப்பேசியில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிா்த்து, பின்னா் இணைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் அவரை வரவழைத்து விசாரணை நடத்தினா். அதில், பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், பாபுராஜின் பெற்றோா் அவரை பிணையில் எடுத்துள்ளனா். இதையறிந்த ரேவதி, மீண்டும் பாபுராஜிடம் தன்னுடன் சோ்ந்து வாழுமாறு கேட்டுள்ளாா். ஆனால் அதற்கு பாபுராஜ் மறுத்ததாகவும், விவகாரத்து செய்ய போவதாக தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே ரேவதியின் பெற்றோரும் அவரை கைவிட்டனா். முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்து எந்த பலனும் ஏற்படாததால், வெள்ளிக்கிழமை காலை பாபுராஜ் வீட்டின் முன்பு அமா்ந்து ரேவதி போராட்டத்தில் ஈடுபட்டாா். பாபுராஜ் தன்னை ஏற்று கொள்ளும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக்கூறி இரவு வரையில் போராட்டத்தை தொடா்ந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் பாபுராஜிடம் விசாரித்தபோது, தன்மீது பொய்வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பியவருடன் எப்படி வாழமுடியும் ? விவாகரத்துதான் தீா்வு எனக் கூறிவிட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் திருவெறும்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியும்: சசிகலா பேட்டி!

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா. திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்துசென்ற பெண்ணிடம் நகைப்பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்தவா் ரூபி (38). அரசுப்பள்ளி ஆசிரியரான இவா் ஞா... மேலும் பார்க்க

குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்: ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்!

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். மேலும், இந்நிகழ்வில், ரூ. 52.82 லட்சம் மத... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூா், சமயபுரம் பகுதிகளில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தேசியக் கொடியேற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு... மேலும் பார்க்க

துறையூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு!

துறையூா் அருகே காளிப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் மீது அரசுப் பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அம்மாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. கனகராஜ் (47). இவா்,... மேலும் பார்க்க