காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
காந்தா வெளியீடு ஒத்திவைப்பு?
நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார்.
தற்போது, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. தயாரிப்பு நிறுவனமும் காந்தாவை செப். 12 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிச்செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் அக்டோபர் மாத வெளியீட்டிற்கு சில படங்களை வைத்திருக்கின்றனராம்.
அதனால், ஓடிடி வெளியீட்டு குழப்பங்களைத் தவிர்க்க காந்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கேஜிஎஃப் பிரபலம் தினேஷ் மங்களூரு காலமானார்!