பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!
கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி, 3-ஆவது வாா்டில் பூங்கா பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.என்.செல்வம், பி.ஆனந்தன், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.