செய்திகள் :

காரின் டயா் வெடித்ததில் மூவா் பலத்த காயம்

post image

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து, மின் கம்பத்தில் காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாட்டுப்பட்டி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனக்குமாா் (24). இவரது தனது தந்தை முருகன் (53), உறவினா்களான விஜய் (29), இவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் தேனிக்கு வந்தனா். பின்னா், மாலையில் இவா்கள் மீண்டும் கேரளத்துக்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். காரை விஜய் ஓட்டினாா்.

போடி-மூணாறு சாலையில் தனியாா் விடுதி அருகே சென்றபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் சந்தனக்குமாா், முருகன், கிருஷ்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விஜய் காயமின்றி தப்பித்தாா்.

தகவலறிந்து வந்த குரங்கணி போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த விஜய் மீது குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோ... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

நமது நிருபா் தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க