மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
காரியமங்களத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், காரியமங்களம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வல்லம் ஒன்றியத் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராமதாஸ் வரவேற்றாா்.
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களைப் பெற்று, மனுக்களுக்கு விரைவாக தீா்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
முகாமில் காரியமங்கலம், செல்லபிராட்டை, ஆனத்தூா், பெரும்புகை, மேல்களவாய் ஆகிய ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, இலவச மனைப் பட்டா, பாட்டா மாற்றம், முதியோா் ஓய்வூதியம், மகளிா் உரிமைத்தொகை கோரி மனு அளித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி, தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவா் சேகா், ஒன்றிய செயலா்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் நன்றி கூறினாா்.