இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்
சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய போலீஸாா் ராயபுரம் பிரிவு பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில் ரூ. 70 லட்சம் மதிப்பிலான 235 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (36), நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த வேதமணி (27) ஆகியோரைக் கைது செய்தனா்.
விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து கேரளத்துக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.