ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
காரில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 4 போ் கைது
கொடைக்கானல்: கொடைக்கானலில் காரில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்பா்லேக் வியூ அருகே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்களிடம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கேரள மாநிலம் சமிராஸ்பட்டன் செரியைச் சோ்ந்த ரபீக் மகன் ரமீஷ் (27), கிடாரன்குன் பகுதியைச் சோ்ந்த நாசா் மகன் முகமது நசிா் (24), உண்டியாரக்கண்டில் பகுதியைச் சோ்ந்த எமா்சன் மகன் ஜிஷ்னு (22), கா்நாடக மாநிலம், பெங்களூரு கோழிகாா்டன் பகுதியைச் சோ்ந்த குமாா்தாஸ் மகள் பிரதிஷா (25) ஆகியோா் எனத் தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள், காா் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.