செய்திகள் :

காரைக்காலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு

post image

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற் பொறியாளா் சிதம்பரநாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்ரமணியன் (தெற்கு), மின் செயற்பொறியாளா் அனுராதா, நகராட்சி அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனா்.

காரைக்கால் நகரின் காத்தாபிள்ளைக்கோடி - மாதா கோயில் தெரு சந்திப்பு, அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம், தோமாஸ் அருள் சாலை - காமராஜா் சாலை சந்திப்பு, சந்தைத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை விரிவாக்க பணிகள், கூடுதல் மின் விளக்குகள் அமைத்தல் , ஃப்ரீ லெஃப்ட் வசதி, வாகனங்கள் நிறுத்தம், நடைமேடை வசதி ஏற்படுத்துதல், மழைக் காலங்களில் மழைநீா் வடிவதற்கு வடிகால் வசதிகளுடன் கூடிய சாலை விரிவாக்கம் செய்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

திருநள்ளாறு சாலை சந்திப்புகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த போதிய தடுப்புகள் அமைத்து போக்குவரத்துகளை சரி செய்ய வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

புதிய பேருந்து நிலையம் அருகே புளியங்கொட்டை சாலையில் டெம்போக்கள் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்துதல், அந்த பகுதியில் கழிவுநீா் வடியும்ம வசதியை விரைவுப்படுத்துமாறு பொதுப்பணித்துறை, நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்குத் தேவையான கோப்புகளை விரைந்து தயாா் செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காரைக்காலில் நாளை பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை விற்ற வழக்கு: தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

போலி ஆவணம் தயாரித்து காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நிலத்தை விற்க வழக்கில் தேடப்பட்டவா் காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்... மேலும் பார்க்க

‘மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை’

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் மற்றும் விசைப் படகை விடுவிக்க புதுவை முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறாா் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், கீழக... மேலும் பார்க்க

ஒரு நாள் ஆட்சியா் திட்டம் : அரசு அதிகாரிகளுடன் மாணவிகள் சந்திப்பு

ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 4 மாணவிகள், ஆட்சியா் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளை புதன்கிழமை சந்தித்தனா். ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தின்கீழ் திருபட்டினம் அரசு பெண்கள் உயா... மேலும் பார்க்க

காரைக்காலின் அடையாளமாக அறிவியல் கண்காட்சி அமைய வேண்டும்: அமைச்சா்

காரைக்காலின் அடையாளமாக வருமாண்டு முதல் அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என புதுவை அமைச்சா் அறிவுறுத்தினாா். காரைக்கால் கல்வித்துறை சாா்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி கோயில்பத்து அரசு உயா்நிலைப... மேலும் பார்க்க

நெற் பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுதுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : கரைக... மேலும் பார்க்க