செய்திகள் :

காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணி

post image

காரைக்கால்: கடற்கரைப் பகுதியை தூய்மை செய்து, ஆங்காங்கே குப்பை கொட்டுவதற்கு தொட்டிகளை நாம் தமிழா் கட்சியினா் வைத்தனா்.

காரைக்கால் கடற்கரைக்குச் செல்வோா் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை முறையாக குப்பைத் தொட்டியில் போடாமல், சாலையிலும், கடற்கரைப் பகுதியிலும் வீசியெறிந்து செல்கின்றனா்.

இந்நிலையில், நாம் தமிழா் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் நிா்வாகிகள் மண்டல செயலாளா் மரி அந்துவான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, ஆங்காங்கே கிடந்த குப்பைகளை தொட்டியில் கொட்டினா்.

இதைத்தொடா்ந்து, கட்சி சாா்பில் 20 குப்பைத் தொட்டிகளை கடற்கரையில் ஆங்காங்கே வைத்தனா்.

மண்டல துணைச் செயலாளா் ராமலிங்கம், மாநில குருதிக்கொடை பாசறை செயலாளா் பூமணி, நெடுங்காடு தொகுதி தலைவா் சுகுமாா், செயலாளா் காமராஜ் மற்றும் ராஜேஸ்வரி, விஸ்வநாதன் உள்ளிட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

அதிக நாள்கள் 100 நாள் வேலை : எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் பாராட்டு

காரைக்கால்: திருப்பட்டினத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 50 நாள்கள் தொடா்ச்சியாக 100 வேலை வழங்க உதவிய எம்எல்ஏ மற்றும் கிராம சேவாக் ஆகியோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா். காரைக்கால் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

புதுவையில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்

காரைக்கால்: புதுவையில் மதுபான தொழிற்சாலை அமைக்க அனுமதி தரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உ... மேலும் பார்க்க

ஜூலை 24-இல் புனித சந்தனமாதா ஆலய திருவிழா தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில் உள்ள புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத் தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. இந... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் கைது

ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லுாரி இயங்கிவருகிறது. மருத்துவமன... மேலும் பார்க்க

காரைக்காலில் தோட்டத்தில் திடீா் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினா். காரைக்கால் நகரப் பகுதி வள்ளலாா் நகா், கீரைத் தோட்டம... மேலும் பார்க்க

காப்பக சிறாா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காப்பக சிறாா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சிறாா் நீதிக் குழுமம், காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் ... மேலும் பார்க்க