2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து
நாகப்பட்டினம்: பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பிரிவில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் ஆக.24, 25, 27, 28 தேதிகளில் திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூா் வரை மட்டும் இயக்கப்படும்.
இதேபோல, காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஆக. 24, 25, 27, 28 தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து புறப்படும்.
திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் ஆக.24, 25 ஆகிய தேதிகளில் திருவாரூா்-காரைக்கால் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் ஆக.27, 28 ஆகிய தேதிகளில் காரைக்கால்-நாகூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகூா் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் ஆக.24, 25 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.27, 28 ஆகிய தேதிகளில் காரைக்கால்-நாகூா் இடையே ரத்து செய்யப்பட்டு, நாகூரில் இருந்து இயக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.