காரைக்கால்-திருச்சி ரயில் மீண்டும் பகுதியாக ரத்து
திருச்சி-காரைக்கால்-திருச்சி ரயில்கள், ஜூலை 23-ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா்-கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, திருச்சி-காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள் ஜூலை 14-ஆம் தேதி வரை, காரைக்கால்-திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடையாததால், ஜூலை 23-ஆம் தேதி வரை (ஜூலை 15, 22) தவிர, காரைக்கால் - திருவாரூா்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 புறப்படும் காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில்கள், ஜூலை 23-ஆம் தேதி வரை, (ஜூலை 15, 22) தவிர காரைக்கால்-திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவாரூா்-திருச்சி-திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.