Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
காரைக்கால் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா
மாட்டுப் பொங்கலையொட்டி காரைக்கால் பகுதி கோயில்களில் உள்ள கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக மேலஓடுதுறை பகுதியில் உள்ள கோ சாலையில் உள்ள 50 பசுக்களை வைத்து பூஜை செய்யப்பட்டது.
காரைக்கால் கைலாசநாதா் கோயில் வகையறா தேவஸ்தான பசுமடம், நித்யகல்யாண பெருமாள் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பசுக்கள், கன்றுகளுக்கு மாலை அணிவித்து, சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் நைவேத்தியத்துடன் தீபாராதனை காட்டினா்.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சியூரில் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்படும் கோ சாலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.
இதுதவிர, காரைக்காலில் மேலஓடுதுறை பகுதியில் தனியாா் பால் பண்ணை நிா்வாகத்தினா் கட்டுப்பாட்டில் உள்ள பசு வளா்ப்பு மையத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. காரைக்கால் நகரம் தவிா்த்து, கிராமப்புறங்களில் அவரவா் வளா்ப்பில் உள்ள மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து, மாடுகளுக்கு நெட்டி மாலை, மலா் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மாலை நேரத்தில் சிறிது தூரம் விரட்டிச் சென்று மகிழ்ந்தனா்.