காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்
காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது:
காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து பெருநகரங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், காரைக்கால்-பேரளம் ரயில்பாதை அமைக்கப்பட்டுவரும் நிலையில், திருநள்ளாற்றில் ஒரு நிலையம் அமைகிறது.
காரைக்காலின் பெருமையாக, அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் தலம் காரைக்கால் நகரில் அமைந்துள்ளது. எனவே, காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட வேண்டும் என புதுவை சட்டப் பேரவையில் தனி நபா் தீா்மானம் கொண்டுவந்தேன்.
முதல்வா் என். ரங்கசாமி இதற்கு பதிலளிக்கும்போது, மத்திய ரயில்வே அமைச்சருக்கு இதுதொடா்பாக கடிதம் எழுதி உரிய அழுத்தம் கொடுக்கப்படுமென தெரிவித்தாா் என்றாா்.