பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கார்கில் வெற்றி நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்
கார்கில் வெற்றி நாளையொட்டி, நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, லடாக்கின் காா்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் இந்தியா பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த போரில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், இந்திய வீரர்கள் 543 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26 காா்கில் வெற்றி நாள் ‘கார்கில் விஜய் திவாஸ்’ அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கார்கில் வெற்றி நாளில், நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு இராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்!
அவர்களது தீரமும் தியாகமும் என்றும் நம் நினைவை விட்டு நீங்காது என குறிப்பிட்டுள்ளார்.