ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் ...
கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெளியீட்டில் தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
சாய் அபயங்கர் இசையமைப்பில் பீரியட் கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்திற்கு, ‘மார்ஷல்’ எனப் பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் கடலோர கிராமம் காட்டப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
முன்னதாக, நடிகர் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். இவருக்குப் பதிலாக வில்லனாக நடிக்க நடிகர் ஜீவாவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!