முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
காற்றாலையில் தீ விபத்து
காங்கயம் அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
காங்கயம் அருகேயுள்ள நிழலி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலை உள்ளது.
இந்தக் காற்றாலையின் ஒரு பகுதியில் புதன்கிழமை இரவு தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக காற்றாலை முழுவதும் தீப்பரவியது.
இதில், காற்றாலையின் இறக்கைகள் உடைந்து அப்பகுதியில் இருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் காற்றாலை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.