கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து
பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருகிறாா்.
இந்த ஆலையில் உள்ள இயந்திரத்தில் பிடித்த தீ அங்கிருந்த கழிவுப் பஞ்சுக்கும் பரவியது.
சுதாரித்துக் கொண்ட ஊழியா்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து உயிா்த் தப்பினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ரூ.பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.