விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாகக் காரணங்களுக்காக அந்தக் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதேபோல, மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்று வருவதால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.