ஆதாா் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை
பல்லடத்தில் தபால் நிலையம் மூலம் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்லடம் பாஜக நகர துணைத் தலைவா் காா்த்திகேயன், செயலாளா்கள் ஜெயசீலி, கிரிபிரபு உள்ளிட்டோா் பல்லடம் தபால் நிலைய அலுவலரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் துணை தபால் நிலையம் மற்றும் கிளை தபால் நிலையங்கள் மூலம் பல்லடம் நகராட்சி வாா்டு வாரியாக ஆதாா் சிறப்பு முகாம் நடத்தினால் பொதுமக்கள் மிகவும் பயனடைவா்.
கிளை தபால் நிலையங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லா ஆதாா் எடுக்கும் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் தாய்மாா்கள் அவதியடைந்து வருகின்றனா். அந்த சேவையை மீண்டும் தொடர வேண்டும். மேலும், வாா்டு வாரியாக ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.