காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் - அடுத்தடுத்த பரபரப்பு
முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை சுற்றல் காரணமாக, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றார்.
ஸ்டாலின் வாக்கிங் சென்ற அதே அடையார் பார்க்கிற்கு ஓ.பி.எஸ்ஸும் வாக்கிங் வந்துள்ளார்.
அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்தனர்.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தினார்.
சுமார் 3 மணிநேரம் நீடித்த ஆலோசனையின் முடிவில் ஓ.பி.எஸ்ஸின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் நிலைமையைப் பொறுத்து கூட்டணி பற்றி முடிவெடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காலையில் ஸ்டாலினைச் சந்தித்த ஓ.பி.எஸ், இன்று மாலை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று மீண்டும் நேரில் சந்தித்திருக்கிறார்.
ஒரே நாளில் இரண்டு முறை ஸ்டாலினை ஓ.பி.எஸ் நேரில் சந்தித்திருப்பதை வெறுமனே நலம் விசாரிப்புக்கான சந்திப்பு என்று கூறினாலும், தேர்தல் கணக்குகளை முன்வைத்தே இந்த சந்திப்பு என்ற பேச்சும் அடிபடுகிறது.!