திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!
கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!
கிளப் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பயர்ன் மியூனிக் வீரர் ஜமால் முசியாலா (22) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், காலிறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதல் பாதிக்கு முன்பாக பயர்ன் மியூனிக் வீரர் மிசியால கோல் அடிக்க எதிரணியின் கோல் போஸ்ட் அருகே ஓடும்போது பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் டோனாரும்மா பந்தைப் பிடிக்க விழுவார்.
அந்தச் சமயத்தில் ஓடிவந்துக்கொண்டிருந்த முசியாலாவின் கால்கள் டோனாரும்மா உடலின் மீது மோதி கீழே விழுவார். கீழே விழுந்ததும் வலி தாங்காமல் முசியாலா அழுதது அனைத்து வீரர்களையும் நிலைகுலையச் செய்தது.
இந்த விபத்தில் முசியாலாவிற்கு ஃபைபுலா எனும் எழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Musiala sad edit @erayupdatespic.twitter.com/qwaokO4G7g
— Eray Arsiv (@ErayUpdatess) July 5, 2025
விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குணமாக 4-5 மாதங்கள் ஆகுமெனக் கூறப்படுகிறது.
பிஎஸ்ஜி கோல் கீப்பர் டோனாரும்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் விரைவில் குணமாகி வரவேண்டுமென தான் அழும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. பிஎஸ்ஜி அணியினர் இரண்டாம் பாதியில் டியூ 78-ஆவது நிமிஷத்திலும், டெம்பேலே 90+6-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
சில நாள்களுக்கு முன்பு லிவர்பூல் வீரர் ஜோடா கார்விபத்தில் உயிரிழந்த சோகத்தில் மூழ்கியிருந்த கால்பந்து உலகில் இந்த நிகழ்வு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bayern Munich's Jamal Musiala is taken off the field after an injury during the Club World Cup quarterfinal soccer match between PSG and Bayern Munich in Atlanta.