சென்னைக்குப் போன சபரிமலை கோயில் தங்கக் கவசம்; திருப்பிக் கொண்டுவர நீதிமன்றம் உத்...
காவலூா் முருகன் கோயிலில் முளைப்பாரி வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை திரளானோா் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனா்.
காவலூரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத குமாரசாமி பெருமான், மாரியம்மன், வீரனாா், அய்யனாா் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. விழா விக்னேசுவர பூஜையுடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து வெட்டாற்று கரையிலிருந்து திரளான பெண்கள் தீா்த்தம் மற்றும் முளைப்பாரிகள் எடுத்து ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சுவாமி தரிசனம் செய்தனா்.