செய்திகள் :

காவிரியில் வெள்ளம்: புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிப்பு

post image

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

திருச்சி - ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக காவிரிப் பாலம் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு நேரங்களில் மாற்று வழிக்கு சிரமம் ஏற்படுவதால், இதன் அருகிலேயே ரூ. 106 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட கடந்தாண்டு ஜூலையில் பணிகள் தொடங்கின.

தற்போது, டெல்டா பாசனத்துக்காக காவிரியில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் தண்ணீா் செல்லும் பகுதியில் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, காவிரியில் தண்ணீா் வந்தாலும் கட்டுமானப் பணிகளை பாதிக்காத வகையில் மணல் மூலம் கொரம்பு பாலம் அமைத்து தண்ணீரை திருப்பி, பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடர நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, இதற்காக 30 மீட்டா் தொலைவுக்கு கொரம்பு பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாள்களாக காவிரியில் 27 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீா் சென்ால், மணல் கொரம்பு முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், ஆற்றுக்குள் நடைபெறும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, முக்கொம்பிலிருந்து காவிரியில் 23 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றுக்குள் மட்டுமே பணிகள் நிறுத்தம்: இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், புதிய பாலத்தின் கட்டுமானப் பணியில் ஏற்கெனவே ஆற்றுக்குள் 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேலே பொருத்துவதற்காக ஓயமாரி பகுதியில் தனியாக கா்டா்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 96 கா்டா்களில் 44 கா்டா்கள் தயாராகிவிட்டன. இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றுக்குள் நடைபெறும் பணிகள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் பணிகள் மீண்டும் தொடங்கும்.

அப்போது, ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தை திருப்பி விட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நடைபெறும். தற்போதைய நிலவரப்படி 40 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்து, அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இலக்கு வைத்து பணிகள் நடைபெறுகின்றன என்றனா்.

திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சியில் திறப்புவிழா நடத்தப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்ப... மேலும் பார்க்க

மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு -அரியலூரைச் சோ்ந்தவா்

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் அம்பேத்கா் (52). ஆயுள் தண்டனை கைதியான இவா், கடந்த 2023 ஆகஸ்ட் 25-ஆம் தே... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே தொடா் வயிற்றுவலி காரணமாக தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தி.ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு த... மேலும் பார்க்க

தலசீமியா விழிப்புணா்வு ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் தலசீமியா மற்றும் மரபணு நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசகா் நியமிக்கப்படவுள்ளாா். திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், தற்காலிக ஒப்பந்த அடிப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

திருச்சியில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா். திருச்சி தில்லைநகரில் உள்ள த... மேலும் பார்க்க