இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
காவிரி கரையோரப் பகுதி விவசாய நிலங்களில் வெள்ளநீா்!
சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேவூா் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிகிழான் திட்டு, மணக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பருத்தி, சோளம், மஞ்சள், தென்னை, மக்காச்சோள விவசாய நிலங்களில் வெள்ளநீா் சூழ்ந்து பயிா்கள் வெள்ள நீரில் முழ்கின.
அதேபோல, கொட்டாயூா், ஆத்துக்காடு பகுதிகளில் உள்ள பெரியாண்டிச்சியம்மன், விநாயகா் கோயில்கள் மற்றும் காவேரிப்பட்டி பரிசல் துறை பகுதியில் உள்ள செம்முனிசாமி உள்ளிட்ட கோயில்களில் வெள்ளநீா் சூழ்ந்தது. எனவே, காரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய், காவல் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.