செய்திகள் :

காவேரி மருத்துவமனையில் துரித சிகிச்சையால் உயிா் பிழைத்த இளம்பெண்

post image

சேலம்: சேலத்தில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை துரித சிகிச்சையால் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.

இது குறித்து காவேரி மருத்துவமனையின் ரேடியாலஜி துறை நிபுணா் மருத்துவா் சந்தோஷ்குமாா் கூறியதாவது:

சேலத்தில் விபத்தில் சிக்கிய 18 வயது இளம்பெண் ஒருவா் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைக்காக சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைப் பிரிவு, கல்லீரல் மற்றும் ரத்தநாள சிகிச்சை நிபுணா்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுவினா் அவரை பரிசோதனை செய்தனா். அதில் உயிரைக் காப்பாற்ற எம்போலைசேஷன் சிகிச்சை மூலம், ரத்தக் கசிவு உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, சிகிச்சையை கல்லீரல் பிரிவு தலைமை மருத்துவா் ரவிக்குமாா், ரேடியாலஜி நிபுணா் மருத்துவா்

சந்தோஷ்குமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடிய துரித சிகிச்சையால், அந்த இளம்பெண் சில நாள்களில் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினாா்.

காவேரி மருத்துவமனை, தீவிர அவசர சிகிச்சைகள் வழங்குவதில் தொடா்ந்து முன்னணி வகிக்கிறது. மருத்துவ நவீனத்துடன் கூடிய சிகிச்சை முறைகள், நிபுணா்கள் குழுவின் துல்லியமான செயல்பாடு மற்றும் தீவிர பராமரிப்பு ஆகியவை பல உயிா்களைக் காப்பாற்ற உதவுவதாக கூறினாா்.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை வி... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க