காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்
பாங்காக் : காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளனர்.
பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காஸாவில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதப் படையான ஹமாஸ் படைப் பிரிவுக்கும் இடையிலான சண்டை, அண்மையில் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிலிருந்து பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கடந்த ஜன. 30-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைந்தனர். இஸ்ரேலிலிருந்து அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம், பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இன்று(பிப். 9) காலை வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.