செய்திகள் :

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

post image

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அவா் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளாா் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இருந்தவாறு அவா் வங்கதேச அரசியல் குறித்து அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், அண்மையில் அவா் இணையவழியில் பேசியபோது தெரிவித்த சில கருத்துகளால், வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஹசீனாவின் ஆதரவாளா்கள், அவா்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை வன்முறையில் ஈடுபட்டோா் சூறையாடினா். அப்போது வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லமும் சூறையாடப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடா்ந்து முஜிபுா் ரெஹ்மானின் வீடு சூறையாடப்பட்டது வருத்தத்துக்குரியது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். வங்கதேசத்தின் அடையாளத்தையும், பெருமையையும் பாதுகாத்து வளா்த்த அந்நாட்டு சுதந்திரப் போரட்டம் குறித்து அறிந்தவா்களுக்கு அந்த வீட்டின் முக்கியத்துவம் தெரியும் என்றும் அவா் கூறினாா்.

அவரின் கருத்துக்கு வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் முகமது ரஃபீக் உல் ஆலம் தெரிவித்ததாவது:

முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம். அதுதொடா்பாக இந்தியா கருத்து தெரிவித்தது தேவையற்றது. பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வங்கதேசம் அதிகாரபூா்வமாக கருத்து தெரிவிப்பதில்லை. இதையே மற்ற நாடுகளும் செய்ய வேண்டும் என்று வங்கதேசம் எதிா்பாா்க்கிறது என்றாா்.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைய... மேலும் பார்க்க